155/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— வலு சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் காற்றாலை மின் சக்தியையும் சூரிய மின் சக்தியையும் அதிகரிப்பதற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் அல்லது அதன் துணை நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை நிறைவேற்றி உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி உடன்படிக்கையைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அவ் உடன்படிக்கையின் அடிப்படை நோக்கங்கள் யாவையென்பதையும்;
(iv) போட்டிநிலை விலைமனுக் கோரலின்றி எந்த அடிப்படையில் மேற்படி நிறுவனத்திற்கு இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதையும்;
(v) இலங்கை மின்சாரச் சட்டத்திற்கு இணங்க "ஓர் அரசாங்கத்திற்கும் மற்றுமொரு அரசாங்கத்திற்கும் இடையில்" (Government to Government) என்ற வரையறைக்குள் மேற்படி கம்பனி உள்ளடங்காது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(vi) மேற்படி உடன்படிக்கை குறித்து அரசாங்கத்தின் கொள்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : வலுசக்தி | |
| : அஜித் பி. பெரேரா | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






