154/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னாரில் நிறுவப்பட்டுள்ள ''தம்பபவனீ'' காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தின் கொள்ளளவு (Installed Capacity) யாதென்பதையும்;
(iv) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் பணத்தொகை யாதென்பதையும்;
(v) 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை மேற்படி மின்னுற்பத்தி நிலையம் மூலமாக தேசிய மின் கட்டமைப்புக்குச் சேர்க்கப்பட்டுள்ள வலு சக்தியின் அளவு ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மின்னுற்பத்தி நிலையம் காரணமாக இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(ii) அந்த நடவடிக்கைள் எவ்வாறு வெற்றியளித்துள்ளன என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மன்னார் தீவில் மேலும் காற்றாளை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின் கொள்ளளவு யாதென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
| : வலுசக்தி | |
| : அஜித் பி. பெரேரா | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






