இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் பி. பெரேரா அவர்களினால் கேட்கப்பட்ட வினா

152/2024

கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கெரவலப்பிட்டியவில் நிறுவப்பட்டுள்ள கழிவுகளால் மின்னுற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையத்தில் (Waste-to-Energy Power Plant) உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு இலங்கை மின்சார சபை செலுத்தும் விலை யாதென்பதையும்;

(ii) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தை மிகச்சிறப்பான முறையில் இயக்குவதற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் கழிவுகளின் அளவு எத்தனை மெட்ரிக் தொன்கள் என்பதையும்;

(iii) 2024 ஆம் ஆண்டு மேற்படி மின்னுற்பத்தி நிலையத்திற்கு தினசரி வழங்கப்பட்ட கழிவுகளின் சராசரி அளவு எத்தனை மெட்ரிக் தொன்கள் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்திற்கு கழிவுகளை வழங்கும் உள்ளூராட்சி நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(ii) கழிவுகள் எரியூட்டப்பட்டதன் பின்னர் தற்போது மேற்படி மின்னுற்பத்தி நிலைய வளாகத்தினுள் சேர்ந்துள்ள சாம்பலின் அளவு எவ்வளவு என்பதையும்;

(iii) மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பலை சுற்றாடல் நேயமிக்க வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2023 ஆம் ஆண்டுக்குரியதாக சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: அஜித் பி. பெரேரா
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom