இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் பி. பெரேரா அவர்களினால் கேட்கப்பட்ட வினா

151/2024

கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ள சூரிய மின்சக்திக் கொள்ளவு எவ்வளவு என்பதையும்;

(ii) சூரிய மின்சக்தி மூலம் இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பிற்கு வருடாந்தம் சேர்க்கப்படும் மின்சக்தி எவ்வளவு என்பதையும்;

(iii) "சூரிய பல சங்ராமய" கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iv) "சூரிய பல சங்ராமய" கருத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Net+, Net Metering மற்றும் Net Accounting முறைமைகளின் கீழ் தேசிய மின் கட்டமைப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ள சூரிய மின்சக்திக் கொள்ளளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) சூரிய மின்சக்தியை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: அஜித் பி. பெரேரா
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom