இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் பி. பெரேரா அவர்களினால் கேட்கப்பட்ட வினா

149/2024

கௌரவ அஜித் பி. பெரேரா,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) களுத்துறை நகரம், மில்லனிய, வாத்துவ, மொரொன்துடுவ போன்ற அதிக சனத்தொகை கொண்ட மற்றும் பல்வேறு கைத்தொழில்கள் முன்னெடுக்கப்படுகின்ற அத்துடன் சுற்றுலாத் தொழிற்றுறைக்கு மிகவும் முக்கியமான ஒரு பிரதேசத்திற்கு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பிரவேசத்தை வழங்கும் "பெல்பொல இடமாறலானது" தேசிய ரீதியில் முக்கியமானதொரு கருத்திட்டம் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டத்திற்காக இலங்கை முதலீட்டு சபையால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

(v) மேற்படி கருத்திட்டத்திற்கான காணிகளை கைக்கொள்வதற்கு செலவிடப் பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

(vi) மேற்படி கருத்திட்டத்தை நிறைவுசெய்வதற்கு தேவைப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(vii) மேற்படி கருத்திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்க்கும் காலப்பகுதி யாதென்பதையும்;

(viii) களனிகம இடமாறல் தொடக்கம் தொடங்கொட இடமாறல் வரையிலுள்ள தூரம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: அஜித் பி. பெரேரா
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom