146/2024
கௌரவ அஜித் பி. பெரேரா, — பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) க/ரமுக்கனை வித்யாலோக்க ஆரம்ப பாடசாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கு "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" கருத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(ii) அதற்காக இது வரையில் செலவிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி புதிய பாடசாலையின் நிர்மாணத் திட்டத்திற்கு அமைவாக இன்றளவில் அதன் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட பாடசாலைக் கட்டிடம் பாதியளவு மாத்திரம் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள கற்கள் மற்றும் சிதைவுப் பொருட்களை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி பாடசாலையின் நிர்மாணக் கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : அஜித் பி. பெரேரா | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






