இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

129/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அவ்வாறு மரணித்த ஒவ்வொரு நபரினதும் பெயர், பாலினம், இனம், சமயம், நெருங்கிய உறவினரின் பெயர், முகவரி, சடலம் தகனம் செய்யப்பட்ட திகதி மற்றும் இடம் தனித் தனியே யாதென்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட உயிரிழந்த ஒவ்வொருவரினதும் இறப்புச் சான்றிதழ் இலக்கம், இறப்பு பதிவு செய்யப்பட்ட திகதி மற்றும் மாவட்டம் தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: சட்டத்தரணி ரஊப் ஹகீம்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom