128/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி, மெததும்பர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாபேரியதென்னயில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள / சுவீகரிக்கப்பட்டுள்ள காணியின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணிகளிலுள்ள அரசாங்க பெருந்தோட்டக் காணிகளின் அளவும் தனியாருக்குரிய பெருந்தோட்டக் காணிகளின் அளவும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட காணிகளிலுள்ள தனியார் வீடுகள், கைத்தொழிற்சாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் பொதுச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்திற்காகக் காணிகளைக் சுவீகரிக்கும்போது தனிநபர்கள் தங்களது வீடுகளை இழப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு வீடுகளை இழக்கும் ஒவ்வொரு தனிநபரினதும் பெயர் மற்றும் முகவரி வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) வீடுகளை இழக்கும் நபர்களை மீள்குடியேற்றும் செயன்முறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள கொள்கைசார் முடிவுகள் மற்றும் மாற்று யோசனைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : சட்டத்தரணி ரஊப் ஹகீம் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






