104/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2023 நவெம்பர் 14 தொடக்கம் 2024 நவெம்பர் 13 வரையிலான காலப்பகுதியினுள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியினுள் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி அரிசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(v) அரிசி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி ஒரு கிலோ அரிசியின் இறக்குமதி விலை யாதென்பதையும்;
(vii) மேற்படி அரிசி சந்தைக்கு வழங்கப்படும் விலை யாதென்பதையும்;
(viii) மேற்படி அரிசி வாடிக்கையாளருக்கு விற்கப்படும் விலை யாதென்பதையும்;
(ix) மேற்படி அரிசிக்கு அரசாங்கம் விதிக்கும் வரி எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி | |
| : சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






