இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

101/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024.11.20 ஆம் திகதியளவில் குடிமனை மின் பாவனை மற்றும் வர்த்தக வகை மின் பாவனை ஆகிய ஒவ்வொன்றினதும் அடிப்படையில், ஒரு மின்சார அலகுக்காக அறவிடப்படுகின்ற கட்டணம் வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) 2024.10.21 ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மின் கட்டண திருத்தங்கள் குறித்த விபரங்கள் யாவையென்பதையும்,

(iii) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள்/அங்கீகாரத்திற்கு உட்பட்டதாக அத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(v) மேற்படி ஆணைக்குழுவை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மின்சாரத்திற்கென நிலையான விலையைப் பேண நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தகைய நிலையான விலை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom