இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

99/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024.10.21 ஆம் திகதி தொடக்கம் 2024.11.30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்கள் எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திருத்தப்பட்ட விலையானது ஒவ்வொரு எரிபொருளுக்கும் அமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) மேற்படி எரிபொருள் விலை திருத்தங்கள், எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்குறிப்பிட்ட எரிபொருள் விலைகள் திருத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக உண்மையாகவே திருத்தப்படவேண்டிய விலையானது ஒவ்வொரு எரிபொருளுக்கும் அமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்பதையும்;

(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியின் நன்மையை இலங்கையிலுள்ள எரிபொருள் பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom