இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

98/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2023 அக்டோபர் 22 தொடக்கம் 2024 அக்டோபர் 21 வரையில் பெற்றோலிய விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியினுள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈட்டிய இலாபம்/ அடைந்த நட்டம் எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்படி காலப்பகுதியினுள் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், ஒரு லீற்றரிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு வகை எரிபொருளின் அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

(v) மோசடி செய்யப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(vi) ஒரு லீற்றர் எரிபொருளிலிருந்து மோசடி செய்யப்பட்ட தொகையைக் குறைத்ததன் பின்னர் கிடைக்க வேண்டிய நிவாரணம் தற்பொழுது மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom