இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

97/2024

கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு எத்தனை மெட்ரிக் தொன் என்பதையும்;

(ii) மேற்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் விலை யாது என்பதையும்;

(iii) அரச மற்றும் தனியார் துறை களஞ்சியசாலைகளில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்புகள் பற்றிய தரவுகள் அரசாங்கத்திடம் உள்ளதா என்பதையும்;

(iv) நெல் விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் கிடைக்கும் நன்மைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
: சாமர சம்பத் தசனாயக

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom