இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சமிந்த விஜேசிறி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

91/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைச் சந்தையில் பாவனைக்குப் பொருந்தாத தரமற்ற தேங்காய் எண்ணெய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்படும் முறை யாதென்பதையும்;

(iii) அதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகள் யாவையென்பதையும்;

(iv) அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(v) உயர் தரத்திலான தேங்காய் எண்ணெய் சந்தையில் விநியோகிக்கப்படாததற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
: சமிந்த விஜேசிறி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom