இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹண பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

81/2024

கௌரவ ரோஹன பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தாபிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி ஆணைக்குழு தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

(iii) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தற்போது பல்வேறு ஆட்கள்/நிறுவனங்களினால் மோசடியான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அவ் ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: ரோஹண பண்டார
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom