80/2024
கௌரவ ரோஹண பண்டார,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலய அலுவலகங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவை அமைந்துள்ள நாடுகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைவதற்கு பூர்த்தி செய்திருக்க வேண்டிய கல்வித் தகைமைகள் யாவையென்பதையும்;
(ii) அந்தத் தகைமைகளை பூர்த்தி செய்யாமல், தற்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவராலய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு ஊழியரினதும் பெயர், பணிபுரியும் இடம் மற்றும் பதவி வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) அந்த ஊழியர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து முறையான தகைமையுள்ள ஊழியர்களை வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலய அலுவலகங்களில் பணிபுரிவதற்கு அனுப்புவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா | |
| : ரோஹண பண்டார | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






