இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

66/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று – வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவில் சட்ட விரோதமாக இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப் படுகின்றது என்பதையும்;

(ii) இதன் காரணமாக அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இல்மனைட் அகழ்வுச் செயற்பாடுகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
: இலங்கை தமிழ் அரசு கட்சி
2025-01-08 ஆம் திகதி 2 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom