இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

65/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை மற்றும் எழுவான்கரை பிரதேசங்களை இணைக்கும் பிரதான பாலமான மண்டூர் - குருமன்வெளி பாலத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைத் தவிர இற்றைவரை வேறு எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இதுவரையிலும் மேற்படி பாலம் நிர்மாணிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி பாலத்தை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை தெற்கு எருவில்பற்று ஆகிய பிரதேசங்களை இணைக்கின்ற அம்பிளாந்துறை, குருக்கள்மடம் பாலத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இதுவரையிலும் மேற்படி பாலம் நிர்மாணிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி பாலத்தை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கோரளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திகிலிவெட்டை - சந்திவெளி பாலம் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புன்னக்குடா – களுவன்கேணி பாலத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
: இலங்கை தமிழ் அரசு கட்சி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom