64/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை - தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு, கோறளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஆறு இலட்சம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் உள்ளதென்பதையும்;
(ii) ஆயினும், மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என வர்த்தமானியில் வெளியிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் | |
| : இலங்கை தமிழ் அரசு கட்சி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






