இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சமிந்த விஜேசிறி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

62/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024.01.01 ஆம் திகதியிலிருந்து இதுவரை சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாத வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை வழங்குவற்கு அறவிடப்படும் கட்டணம் யாதென்பதையும்;

(iii) சாதாரண சேவையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு துரிதமாக வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
: சமிந்த விஜேசிறி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom