இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சமிந்த விஜேசிறி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

58/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத எஞ்சின்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அதற்கென செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு புகையிரத எஞ்சினின் இலக்கம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நாடு தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்கூறிய எஞ்சின்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத எஞ்சின்களின் எண்ணிக்கை மற்றும் சேவையில் ஈடுபடுத்தப்படாத புகையிரத எஞ்சின்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) புகையிரத எஞ்சின்களை சேவையில் ஈடுபடுத்தாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி புகையிரத எஞ்சின்களை இறக்குமதி செய்வதில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: சமிந்த விஜேசிறி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom