8/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(ii) மேற்படி ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சம்பளம், படிகள் மற்றும் மிகை ஊதியமாக செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக தனித்தனியாக யாதென்பதையும் ;
(iii) மின்கம்பிகளை இழுத்தல், குழிகளைத் தோண்டுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற பணிகள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) இலங்கை மின்சார சபையில் மிகை ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கத்தக்கதாக மற்றும் இவர்களுக்கு அதிக சம்பளம், படிகள் மற்றும் மிகையூதியம் செலுத்தப்படும் நிலையில், மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் யாவையென்பதையும்;
(vi) அந்த நிலைமையை சரிசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : வலுசக்தி | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






