7/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ருஹுணு சுற்றுலாப் பணியகத்தால் மதுனாகல சுற்றுலாக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) இதன் கீழ் மதுனாகல வெந்நீர் ஊற்றைப் பயன்படுத்தி இதயத் தசை பிடித்துவிடுதல் (இதய புத்துயிரூட்டல்) நிலையமொன்றை அமைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவுசெய்யப்படவில்லை என்பதால் அந்நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் மதுனாகல சுற்றுலா வலயத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை, ஓய்வறை மற்றும் உணவகம் போன்றவற்றுக்காகச் செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) அதிகளவான பணத்தொகையைச் செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதியிலுள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்து காணப்படுவதுடன், விடுதியின் கூரையும் பழுதடைந்த நிலையில் இருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிராமியக் கடைவீதிக்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) தற்போது மேற்படி கடைவீதி சிதைவடைந்த நிலைக்கு உள்ளாகியுள்ளதை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






