இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முதலாவது அமர்வு

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

சபையின் முதலாவது அமர்வின்போது, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை தாங்கினார். அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வின்போது ஏழு (07) பிரதித் தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில் சபைக் கூட்டங்களில் தலைமை வகிப்பர்.

இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்ட வழிப்படுத்தும் குழு நியமிக்கப்பட்டதுடன், இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழிப்படுத்தும் குழுவின் தவிசாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அரசியலமைப்பு சபை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்சொல்லப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் முதல் கூட்டம் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் குழு அறை இல. 3 இல் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட சபையின் ஏழு (07) பிரதித் தவிசாளர்களும் பின்வருவோர்:-

1. கௌரவ திலங்க சுமதிபால
2. கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
3. கௌரவ கபீர் ஹஷீம்
4. கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
5. கௌரவ திலக் மாரபன
6. கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
7. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

நியமிக்கப்பட்ட சபையின் வழிப்படுத்தும் குழுவிலுள்ள இருபத்தொரு (21) உறுப்பினர்களும் பின்வருவோர்:-

1. கௌரவ ரணில் விக்கிரமசிங்க
2. கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
3. கௌரவ நிமல் சிறிபால த சில்வா
4. கௌரவ ரஊப் ஹகீம்
5. கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ
6. கௌரவ ஏ.டீ. சுசில் பிரேமஜயந்த
7. கௌரவ றிஸாட் பதியுதீன்
8. கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
9. கௌரவ டி.எம். சுவாமிநாதன்
10. கௌரவ மனோ கணேசன்
11. கௌரவ மலிக் சமரவிக்ரம
12. கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன்
13. கௌரவ அநுர திசாநாயக்க
14. கௌரவ டிலான் பெரேரா
15. கௌரவ தினேஷ் குணவர்தன
16. கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
17. கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
18. கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
19. கௌரவ பிமல் ரத்நாயக்க
20. கௌரவ பிரசன்ன ரணதுங்க
21. கௌரவ டக்ளஸ் தேவானந்தா

 

[அரசியலமைப்புப் சபை பற்றிய பிரேரணை]

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-05-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom