குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு


Print
குழு செயலாளரை தொடர்பு கொள்க
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
0112777100
0112777227
இக்குழு காலவதியாகியுள்ளது.
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் - 4 ஆம் கூட்டத் தொடர்)


2022 அக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதம அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களால் பிரரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தால் சட்ட அதிகாரம் மற்றும் பொதுவான பொறுப்புக்கள் எனபவற்றைக் கொண்டுள்ள, தேசிய சபையின் மூன்று விடயப் பரப்புக்களில் இரண்டு விடயப் பரப்புகளுக்கான, இரண்டு உபகுழுக்களை நியமிப்பதற்கு 2022 அக்டோபர் 29ஆம் தேதி இடம் பெற்ற தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. இதன் பிரகாரம் 2022 அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இடம்பெற்ற அதன் முதலாவது கூட்டத்தில், குறுங்கால இடைக்கால நீண்டகால தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னுரிமைகளை இனங்காணுதல் மீதான ஒரு உபகுழு நியமிக்கப்பட்டது. 2022 அக்டோபர் ஆறாம் தேதி இடம் பெற்ற தேசிய சபையின் இரண்டாவது கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முன்னுரிமைகளின் பிரகாரம் உப குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். 2022 ஒக்டோபர் 7ஆம் தேதி இடம் பெற்ற உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் சாகர காரியவசம் சட்டத்தரணி அவர்களால் முன்மொழியப்பட்டு, கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களால் வழிமொழியப்பட்டு கௌரவ நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணி உபகுழுவின் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்