இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பணியிடங்களில் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2024-07-03

பணியிடங்களில் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் (ஜூன் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நாட்டின் சனத்தொகையில் அதிகளவானவர்கள் பெண்களாக இருந்தாலும் நிறைவேற்றுத் துறை பதவிகளில் பெண்களில் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஆடைத் தொழிற்துறையிலுள்ள பெண்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கு முறையான பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை அமைப்பதன் தேவையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வீட்டு வேலைகளில் உள்ள தொழிலாளர்கள் தொடர்பில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்கள் பற்றியும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பில் குழுவின் கவனத்தை செலுத்தி தேவையான நடவடிக்கையை எடுப்பதற்குத் தலையிடுவதாக குழு தெரிவித்தது.

அத்துடன், பெண்களை தொழில் முயற்சியாளர்களாக வலுவூட்டுவது தொடர்பில் தமது அமைச்சு விசேட கவனம் செலுத்துவதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படடுத்துகை அமைச்சு சுட்டிக்காட்டியது.

அதற்கு மேலதிகமாக, தொழிற்துறையுடன் செயற்கை நுண்ணறிவு இணைவதனால் பெண் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தாக்கம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, இங்கு கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் குழுவுக்கு அறிக்கை வழங்குமாறும் வருகை தந்த பிரதிநிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி கோரிக்கை விடுத்தார்.

இந்த குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, கௌரவ கோகிலா குணவர்தன மற்றும் கௌரவ சமன்பிரிய ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

3 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom