இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை விசாரணை செய்யும் உப குழு கூடியது

திகதி : 2024-05-22

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் அண்மையில் கூடியது.

கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன உள்ளிட்ட கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், தற்பொழுது அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தாமதம் மற்றும் செயற்படுத்தாமை தொடர்பில் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முறையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது தொடர்பான ஆரம்பகட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைய, இந்த பொறிமுறையானது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவினாலும்  பயன்படுத்தப்படலாம் என்பதால், அந்தக் குழுவின் தலைவரினதும் பங்கேற்புடன் மீண்டும் கூடி இது தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு இதன்போது மேலும் தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என்பன பல வருடங்களாக அரச நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தீர்வு காணும் வகையில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையிலான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இந்த உப குழு நியமிக்கப்பட்டது.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom