இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யுனெஸ்க்கோவிற்கான (UNESCO) இலங்கை தேசிய ஆணைக்குழு' சட்டமூலம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

திகதி : 2024-05-20

கடந்த 2024.02.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யுனெஸ்க்கோவிற்கான (UNESCO) இலங்கை தேசிய ஆணைக்குழு' சட்டமூலம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (மே 09) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் இதற்கு முன்னரும் கலந்துரையாடப்பட்டதுடன், அதன் இரண்டாவது கட்டமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உத்தேச ஆணைக்குழுவின் அமைப்பு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பில் குழுவின் முன்மொழிவுகளும் திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அசங்க நவரத்ன மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கல்வி அமைச்சின் செயலாளர், யுனெஸ்க்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகரிகள் சிலரும் குழுவின் இளைஞர் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom