வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே ஏகமனதாகத் தெரிவு |
திகதி : | 2024-04-02 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (ஏப். 01) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகேவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோகிலா குணவர்தன பிரேரித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில அதனை வழிமொழிந்தார்.
நான்காவது கூட்டத்தொடரில் இந்தக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே பதவி வகித்தார். இங்கு உரையாற்றிய அவர் குறிப்பிடுகையில், முன்னைய கூட்டத்தொடர்பில் இந்தக் குழுவின் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அவர்களது ஆதரவை பெற்று குழுவின் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், கூட்டுறவுத் துறை தொடர்பில் இந்தக் குழுவின் ஊடாக அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், கூட்டுறவு நிதித் துறையில் காணப்படும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து அந்தத் துரையின் முன்னேற்றத்துக்குத் தேவையான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ பி.வை.ஜி. ரத்னசேகர, கௌரவ சம்பத் அத்துகோரல, கௌரவ கருணாதாச கொடிதுவக்கு மற்றும் கௌரவ யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








