பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டடிலின் கீழ் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பில் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் |
திகதி : | 2024-03-25 |
- பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இந்நாட்டு சமூகங்களைத் தெளிவுபடுத்த புத்தகத் தொகுதிகளை வெளியிடக் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமான வெற்றியாகும் – பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி விஜேரத்ன தெரிவிப்பு
- இந்தப் புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பாகப் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகக் தொகுதிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை அறிவுறுத்தும் நிகழ்வு அண்மையில் (மார்ச் 21) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான கௌரவ சுசில் பிரேஜயந்த, சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களையும் சமூகத்தையும் தெளிவுபடுத்த கௌரவ ரோஹினி விஜேரத்ன அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டிலின் கீழ் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சிறுவர் விவகாரம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்துடன் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுடன் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து இந்தப் புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் தயாரிக்கப்பட்டதுடன், இவை கடந்த மார்ச் 07ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன, இனவிருத்தி சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான புத்தகத் தொகுதிகளையும், டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்களையும் அறிமுகப்படுத்துவது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். இந்நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு சிறுவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்றார்.
பல வருடங்களுக்கு முன்னர் துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக இதனை மேற்கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும், பல்வேறு தடைகள் காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனமையையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், இது பெருந்திரளான மக்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட பணி என்பதால், அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த வேலைத்திட்டம் காலத்தின் தேவையுடன் கூடிய சிறந்த வேலைத்திட்டம் எனவும், அதற்காக கௌரவ ரோஹினி விஜேரத்ன தலைமையிலான அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அத்துடன், காலத்தின் தேவையாக இருக்கும் இப்புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சுரமான கௌரவ சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்தப் பணிகளை நிறைவேற்ற தலையிட்ட பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கௌரவத்தைத் தெரிவித்தார்.
இங்கு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடநூல்களும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடநூல்கள் தொடர்பான அறிமுகமும் இடம்பெற்றது. அதன்படி, வயது 11 வயது முதல் நான்கு வயதுப் பிரிவுகளுக்கு இந்தத் புத்தகத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் டிஜிட்டல் ஊடக நிகழ்சித் தொகுப்புக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, சிறுவர்கள் மற்றும் சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க QR குறியீட்டைப் பயன்படுத்தி முகப்புத்தகம், யூடியூப், எக்ஸ், டிக் டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய வீடியோ நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்














