வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவு |
திகதி : | 2024-03-20 |
வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார். இன்று (மார்ச் 20) இந்தக் குழு கூடிய போது அவரது பெயரை கௌரவ வசந்த யாப்பா பண்டார முன்மொழிந்ததுடன் அதனை கௌரவ லசந்த அழகியவண்ண வழிமொழிந்தார்.
வலி வகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யு.டீ.ஜே. செனெவிரத்ன, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.
குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தலைவர், இலங்கை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களினால் இடைநிலை வர்த்தகர்கள் 300%க்கும் அதிகமான இலாபம் பெறுவதாக சுட்டிக்காட்டினார். அதற்கமைய, அடுத்த கூட்டத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து தரப்பினரையும் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றைய தினத்தில் குழுவுக்கு அனைத்து உறுப்பினர்களையும் அனுமதிப்பதாக தலைவர் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







