இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கோபா குழுவின் புதிய தலைவராக கௌரவ லசந்த அழகியவண்ண ஏகமனதாகத் தெரிவு

திகதி : 2024-03-07

பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மார்ச் 07) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது, கௌரவ லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். சிறீதரன் வழிமொழிந்தார்.

இதன்போது குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் புதிய தலைவர் வருகை தந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ டயனா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ எஸ். சிறீதரன், கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ எம். உதயகுமார், கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ கருணாதாச கொடிதுவாக்கு, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ மதுர விதானகே, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom