தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு வரைபு (2023-2033) குறித்து மூன்றாவது மற்றும் நான்காவது கலந்துரையாடல்களை நடத்திய கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு |
திகதி : | 2024-03-06 |
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு வரைபு (2023-2033) (National Education Policy Framework) தொடர்பில் மூன்றாவது மற்றும் நான்காவது கலந்துரையாடல் கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்றது.
கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) வீ.இராதாகிருஷணன் தலைமையில் கடந்த பெப்ரவரி 22 மற்றும் 28ஆம் திகதிகளில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கொள்கைக் கட்டமைப்பு வரைபில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய விடயங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், தேசியக் கல்வியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் சுருக்கம் பற்றிய பல்வேறு அம்சங்களைப் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம மற்றும் கலாநிதி மதுர எம். வெஹெல்லே ஆகியோர் விளக்கினர்.
குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ விமலவீர திஸாநாயக்க, கௌரவ ரோஹினி கவிரத்ன, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க, கௌரவ பி.வை.ஜீ. ரத்னசேகர, கௌரவ கெவிந்து குமாரதுங்க, கௌரவ முதிதா சொய்சா, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்கவும் கலந்துகொண்டனர்.
மேலும், இக்கூட்டத்தில் கல்வி அமைச்சு தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் கொள்கைக் கட்டமைப்ப தயாரிப்பதற்கு இணைந்துகொண்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








