இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சுற்றுச்சூழலுக்கு நட்பான, உயர் தரம் கொண்ட, உயிரியல், இயற்கை மற்றும் ஹைபிரிட் உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி நெற்பயிர்ச் செய்கையைப் பார்வையிட்டது துறைசார் மேற்பார்வைக் குழு

திகதி : 2024-03-01

இராசயன உரம் மற்றும் தொழில்நுட்பத்தினால் விருத்தி செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு நட்பான, உயர் தரம் கொண்ட, உயிரியல், இயற்கை மற்றும் ஹைபிரிட் உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட  முன்மாதிரி நெற்பயிர்ச் செய்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பெப்ரவரி 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நேரில் சென்று பார்வையிட்டது.

இந்த விஜயத்தில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டீ. வீரசிங்க மற்றும் குழுவின் உறுப்பினரான கௌரவ கிங்ஸ் நெல்சன், துறைசார் மேற்பார்வைக் குழு அலுவலகம், விவசாயத் திணைக்களம், விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை, தேசிய உர செலயகம், கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண விவசாயத் திணைக்களங்கள், மகாவலி பீ மற்றும் சீ வலயங்களைப் பிரதிநிதித்துவப்படும் அதிகாரிகரிகளும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

வெலிகந்த மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி பயிர்ச்செய்கையின் வெற்றிகரமான விளைச்சலை விவாசியிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிட்டு இந்த முன்மாதிரியை மேலும் பரவலாக்குவதாக கௌரவ டீ. வீரசிங்க தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுச்சூழலுக்கு நட்பான, உயர்ந்த தரம் வாய்ந்த, சிறுமணியுருவான மற்றும் குளிகை (Granular and Pellet) இயற்கை உர உற்பத்திச் சாலைகள் இரண்டு குழுவினால் கண்காணிக்கப்பட்டது.

எலிப்பிச்சியவில் உள்ள தானியங்கித் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு மாதத்துக்கு 10,000 மெட்ரிக் டொன் உற்பத்திக் கொள்ளளவு கொண்ட ஹியோசங் ஓ.என்.பீ. (Hyosung ONB) உரத் தொழிற்சாலை மற்றும் அனுராதபுரம் ஒயாமடுவவிலுள்ள அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு சிறுமணியுருவான மற்றும் குளிகை இயற்கை உரம் உற்பத்தி செய்யும் வருடாந்தம் 10,000 மெற்றிக் டொன் உற்பத்திக் கொள்ளளவு கொண்ட தொழிற்சாலையான எகோ ப்ரொடெக்ட் எஞ்சினியரிங் நிறுவனம் [Eco Protect Engineering (Pvt) Ltd] என்பன குழுவினால் கண்காணிக்கப்பட்டது.

தற்பொழுது பாரிய முதலீடு செய்யப்பட்டு பாரியளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த உரங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு அரசங்கத்தினால் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு இயற்கை உர உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருந்தது.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom