அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவி மீண்டும் கலாநிதி ஹர்ஷ த சில்வாவுக்கு |
திகதி : | 2024-02-09 |
|
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இதன் தலைவராக கௌரவ கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் இன்றையதினம் (பெப். 09) சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ விஜித ஹேரத், கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ இசுரு தொடன்கொட , கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.