இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தப்படாமை தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2024-01-29

ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தப்படாமை தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அத்தகைய திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் (ஜன. 12) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இதற்கு முன்னர் கருத்திற்கொள்ளப்பட்ட, நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட "சியத உயன" திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை திட்டம், ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை புகையிரதத் திணைக்களம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom