இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை மற்றும் அணிசேரா இயக்கம் தொடர்பில் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

திகதி : 2024-01-26

கடந்த ஜனவரி 24ஆம் திகதி கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை மற்றும் அணிசேரா இணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், உகண்டாவின் கம்பலா நகரில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் 19வது மாநாட்டில் இலங்கையின் பங்குபற்றல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை கண்டியில் நடைபெற்ற கொழும்பு மாநாடானது ஆசிய – ஆபிரிக்க ஒத்துழைப்பைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும், 1955ஆம் ஆண்டில் இந்தேனேசியாவின் பண்டுங் மாநாட்டை நடத்துவதற்கும் அடிப்படையாக அமைந்தது என்றும், 10 பண்டுங் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அணிசேரா இயக்கம் உருவாவதற்கு தளமாக அமைந்தது என்றும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும், 1976 ஓகஸ்ட் 16 முதல் 19 வரை கொழும்பில் 5வது அணிசேரா மாநாட்டை நடத்தியதன் மூலம் இலங்கையின் நீண்ட மற்றும் தீவிரமான தலையீடு முடிவுக்கு வந்தது என்றும் அங்கிருந்த அதிகாரிகள் குழுவிடம் விளக்கினர். இதில் கலந்துகொண்ட 86 நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி கொழும்புப் பிரகடனத்தை உருவாக்கியிருந்ததாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இலங்கையின் தலைமையின் கீழ் அணிசேரா இயக்கம் ஐ.நா பொதுச் சபையில் நிராயுதபாணியாக்குவது தொடர்பான சிறப்பு அமர்வொன்றுக்கு அழைப்பு விடுத்ததுடன், தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டையும் எடுத்தது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ மதுர விதானகே, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom