இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

திகதி : 2024-01-17

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன்,     அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக கலாநி.எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகமவின் நியமனத்துக்கும் அங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின்  தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாந்து மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவராக எம்.ஜே.சூசைதாசன் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (ஜன. 10) நடைபெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால.த சில்வா, கௌரவ கெஹலிய ரம்புக்வல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தலதா அதுகோரல, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom