இலங்கையில் விவசாயப் பயிர்களுக்கு உரம் இடும் வேலைத்திட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு |
திகதி : | 2023-12-20 |
- விவசாய விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துவது தொடர்பில் குழுவின் கவனம்
- கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு நிதி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் குழுவின் கவனத்திற்கு
இலங்கையில் விவசாயப் பயிர்களுக்கு உரம் இடும் வேலைத்திட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி. வீரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கண்டி தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவனம் நுண்ணுயிர் உயிரியல் தொழிநுட்பம் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் காமினி செனவிரத்ன உள்ளிட்ட சிலர் இலங்கையில் விவசாயப் பயிர்களுக்கு உரம் இடுதல் தொடர்பில் விளக்கமளித்தனர். அத்துடன், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை இதன்மூலம் விளக்கமளித்தனர். இதன்மூலம், நோய்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஊட்டச்சத்தின் தரம் என்பன தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் 32 மண் ஆய்வகங்கள் உள்ளன எனவும், அவற்றில் மண் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தும் அவசியம் தொடர்பில் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், பிரதேச ரீதியான மண் வேறுபாடுகளை இனங்கண்டு, அந்தந்தப் பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்குப் பல்வேறு உரங்களை வழங்குவதன் அவசியம் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. பிரதேச ரீதியாக அறிவுறுத்தும் பணிகள் தற்பொழுது வரை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், தொழிநுட்ப ரீதியான விருத்தி செய்யப்பட்ட உரங்களை அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொருத்தமான வகையில் அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், விவசாய விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துவது தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான கமத்தொழில் அதிகாரிகள் மூலம் கமத்தொழில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் முன்னேற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை மாகாண விவசாயிகளின் மத்தியில் விரிவாக்கும் விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு நிதி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
IFDA அமைப்பினர் வழங்கப்படும் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய பங்குபற்றல் வேலைத்திட்டத்தில் (SAPP திட்டம்) இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு குழுவுக்கு அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவரின் அழைப்பில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, குழுவின் உறுப்பினர்களான கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ கிங்ஸ் நெல்சன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய கௌரவ சமன்பிரிய ஹேரத் மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், கமத்தொழில் அமைச்சு, மாகாணக் கமத்தொழில் அமைச்சு, கணக்காய்வாளர் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், தேசிய உர செயலகம், உர அமைப்புக்களின் பிரதிநிதிகள், தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








