இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உணவுப் பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கருக் கொள்கை வரைபு தேசியப் பேரவை உபகுழுவில் மீள் பரிசீலனை

திகதி : 2023-12-13

  • 2022 ஆம் ஆண்டளவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை 79 வது இடத்தில்

 

உணவுப் பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கருக் கொள்கை வரைபு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் காணப்படும் தேசிய உணவுக் கொள்கை தொடர்பான குழுவுடன் ஒன்றிணைந்த முறையில் கொள்கை வகுப்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (டிச. 08) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.  

அத்துடன், 2022 ஆம் ஆண்டளவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை 79 வது இடத்தில் உள்ளதாக குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிரிடப்படாத காணிகள் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் இயலுமை தொடர்பிலும் குழுவில் இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பில் ஆராயுமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபு தொடர்பில் தேசிய உணவுக் கொள்கை தொடர்பான குழு, ஜனாதிபதி செயலகத்தின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான தேசியக் கொள்கை வரைபொன்றைத் தயாரிப்பதற்காக தேசிய பேரவை உப குழுவினால் நியமிக்கப்பட்ட செயற்குழுவுடன் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசங்க நவரத்ன தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், இந்தக் கொள்கை வரைபை தயாரிப்பதற்காக  சுமார் 8 மாதங்கள் செயற்குழு கூடியுள்ளது.

நாட்டின் உணவுப் பாதுக்காப்பை உறுதிப்படுத்துவதற்கு நடுத்தர மற்றும் நீண்டகாலக் கருத்துக்கள் அடங்கிய   இந்தக் எண்ணக்கருக் கொள்கை வரைபை தயாரிப்பதற்கு நீர்ப்பாசன அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வடமேல்மாகாண விவசாய அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் என்பன ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்கியுள்ளன.

அதற்கமைய, இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விடயங்களை உணவுப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு முன்வைத்து அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய இறுதி அறிக்கையை 2024 ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பேரவையின் உபகுழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, டீ. வீரசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom