மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு |
திகதி : | 2023-12-10 |
மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார். இவ்வொன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் அண்மையில் (டிச. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர பிரேரித்ததுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட வழிமொழிந்தார். அத்துடன், ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ லலித் எல்லாவல ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அடிப்படையாக மனித உரிமைகள் தொடர்பில் ஒன்றியத்துக்கு புரிதலைப் பெற்றுக்கொள்வதன் தேவையை நினைவு படுத்தினார். அதற்கமைய, மனித உரிமை தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற வளவாளர் ஒருவரை அழைத்து தெளிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன வீரசிங்க,கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ லலித் எல்லாவல மற்றும் கௌரவ உதயன கிரிந்திகொட ஆகியயோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








