சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை விசாரணை செய்யும் கோபா உபகுழுவின் வரைவு தொடர்பில் கோபா குழுவின் கவனத்திற்கு |
திகதி : | 2023-12-07 |
சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சிக்கல்களை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உப குழுவினால் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்குத் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கலந்துரையாடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கோபா குழு அண்மையில் (டிச. 05) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு 2023.09.20 ஆம் திகதி கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு அமைய சுகாதார அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்து தீர்வு காணும் தேவை ஏற்பட்டது. அதற்கமைய கோபா குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், அவற்றில் ஒரு குழு சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சிக்கல்களை விசாரணை செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்த உப குழு 2023.09.27 ஆம் திகதி முதல் 6 தடவைகள் கூடி சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இந்த வரைபு மூலம் 19 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதற்கமைய, இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் கோபா குழுவில் கவனத்திற்கொள்ளப்பட்டது.
இந்த வரைவு அறிக்கையை கோபா குழுவில் சமர்ப்பித்த உப குழுவின் தலைவர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகையில், அவசர மருந்து கொள்வனவு செய்வது தொடர்பில் பாரியளவிலான பிரச்சினைகளை உபகுழு கண்டறிந்துள்ளதாகவும் அவற்றைக் குறைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளை இந்த அறிக்கையில் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், கொள்முதலுக்கு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்னைகளை குறைப்பதற்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர், இந்த அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஜே.சி. அலவதுவல, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் கௌரவ எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









