இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு

திகதி : 2023-12-01

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.   

இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (நவ. 27) பாராளுமன்றத்தில் கூடிய போதே இடம்பெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அதன் செயற்பாடுகள் மற்றும் வரவுசெலவுத்தித்திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.   

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீது பாரியதொரு நம்பகத்தன்மை நாட்டு மக்கள் மத்தியில்  நிலவுகின்றதென்றும், இதனால் இந்த நம்பிக்கையை பாதுகாப்பது இவ் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ் ஆணைக்குழுவில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாகவும் கவனம்  செலுத்தப்பட்டதுடன், நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவது தொடர்பாக கோபா குழு பரிந்துரை வழங்கியது.

அதற்கு மேலதிகமாக, UNDP நிறுவனத்தின் மூலம் இவ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு செயற்படவில்லை என்பது தொடர்பாகவும் குழு வினவியது. இந்தத் தரவுக் கட்டமைப்பானது சரியான முறையில் செயற்படுகிறதாகவும், பிரதேச அலுவலகங்களில் தரவுகளை உள்ளீடு செய்வதில் பலவீனம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதனால் பிரதேச ரீதியாக தரவுகளை உள்ளீடு செய்வதற்கு அதிகாரிகளை நியமிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். தேவையான அதிகாரிகளை நியமிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவித்தது.

அத்துடன் இவ் ஆணைக்குழுவிற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது வரை தீர்வு வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பாகவும்  இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்பொழுது தீர்வு வழங்கப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை குழு சுட்டிக்காட்டியது.

மேலும், 2024 ஜனவரி 24 ஆம் திகதி இவ் ஆணைக்குழுவை மீண்டும் கோபா குழு முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா, கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஜே. சீ. அலவதுவல, கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும்  முதிதா பிரிஷாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom