மத்திய கலாசார நிதியத்தின், நிதியை பயன்படுத்தும் விதத்தை நிச்சயித்துக் குறிப்பிடும் வகையில் சட்டத்தை திருத்தவும் - மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு |
திகதி : | 2023-11-30 |
- சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதனால் தினமொன்றுக்கு 3000 டொலருக்கு அதிக வருமானம் - மத்திய கலாசார நிதியம் குழுவில் தெரிவிப்பு
- சிகிரியாவை அபிவிருத்தி செய்ய KOICA நிறுவனத்தினால் 8 மில்லியன் டொலர்
மத்திய ககலாசார நிதியத்தில் காணப்படும் நிதி, முறைகேடான வகையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிச்சயித்து ஒழுங்கிவிதிகளைத் தயாரித்து மத்திய கலாசார நிதிய சட்டத்தை திருத்துமாறு மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை வழங்கியது. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தலைமையில் 2023.11.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடன் சுமையில் இருந்த மத்திய கலாசார நிதியத்தின் டொலர் ஈட்டும் பெறுமதி தற்பொழுது 614% அதிகரித்துள்ளதாக நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க குழுவில் தெரிவித்தார். தற்பொழுது, சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தின் அழகை வெளிநாட்டவர்களுக்குக் காணும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம் தினமொன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரக்கூடிய சிகிரியாவைச் சூழவுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், இந்தச் செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாகச் செய்வதற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க KOICA இணங்கியுள்ளதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
சுற்றுலாப் பிரதேசங்களில் முறைசாரா வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக கட்டணத்தை அறவிடுவதும் இங்கு புலப்பட்டது. அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் குழுவில் வலியுறுத்தினர்.
மத்திய கலாசார நிதியத்தின் வெற்றிடங்களுக்குப் ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தற்போது கடமையாற்றும் நிரந்தரமற்ற 286 ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் தலையிடுவதற்கு குழு இணக்கம் வழங்கியது.
அத்துடன், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்கள அதிகாரிகளும் குழு முன்னிலையில் கலந்துகொண்டிருந்தனர். அந்தத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் இதன்போது கேட்டறிந்தார். அதற்கமைய, தற்போதுள்ள காணி மற்றும் சொத்துக்களை திறம்படப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பணிகளை சிறப்பாகச் செய்யும் வகையில், திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் அடிப்படைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர், கௌரவ எம். ராமேஷ்வரன், குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய கௌரவ இருசு தொடங்கொட, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க ஆகியோரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








