மருத்துவ உபகரணங்கள், அம்பியுலன்ஸ், குழந்தைகளுக்கான உயர் புரத உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு VAT வரி விலக்களிப்பை மீண்டும் பரிசீலிக்கவும் - அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை |
திகதி : | 2023-11-30 |
- இறக்குமதி செய்யப்பட்ட 119 வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல்.
- VAT விலக்களிப்பை நீக்குவது UBER மற்றும் PickME கட்டணங்களை பாதிக்காது - CoPF வெளிப்படுத்தியது
ஒரு சில பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிப்பை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட மற்றும் இலகுவாக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) நீக்குவது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடங்கிய பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது.
நிதியமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், முன்னர் விலக்களிப்பு செய்யப்பட்ட பட்டியலிடப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட பிற உபகரணங்கள் இந்த சட்டமூலத்தின் ஊடாக VAT வரிக்குள் உள்வாங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். விவசாய விதைகள், விவசாய தாவரங்கள், இறால் தீவனங்கள் மற்றும் கோழி தீவனம் தவிர்ந்த கால்நடை தீவனங்கள் VAT வரியில் இருந்து விலக்களிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, வீட்டு விவசாயம் மற்றும் உணவுத் தொழிலைப் பாதிக்கும் விவசாய உபகரணங்கள் மீது VAT அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள நியாயத்தை குழு கேள்வி எழுப்பியது.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம், 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதி சட்டம் மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதி சட்டம் என்பவற்றை திருத்துவதற்கான நிதி சட்டமூலம் மற்றும் 2353/16 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தலைப் பரிசீலிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (நவ. 28) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் திரவப் பால் மற்றும் முட்டை போன்ற பால் பொருட்களும் VAT வரிக்கு உட்பட்டவை. எனினும், கோதுமை, கோதுமை மாவு அல்லது பால் மாவு, மருந்து பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு விலக்களிக்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்தது. சிறுவர் போஷாக்கின்மை காணப்படும் இலங்கையில், பயிரிடப்படும் தானியங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை, 'போஷாக்கு' வகையின் கீழுள்ள அதிஉயர் புரதம் மற்றும் அதிக சக்தி கொண்ட விவசாய உணவுகளாக இனங்கண்டு VAT வரியில் உட்படுத்தப்படுவது ஏன் என குழு வினவியது.
அத்துடன், அம்பியுலன்ஸ் மற்றும் வைத்திய உபகரணங்களும் ஏன் VAT வரிக்கு உட்படுத்தப்படுவது ஏன் என அதிகாரிகரிகளிடம் குழு வினவியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தை பரிசீலித்த பின்னர், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தம் நிதி அமைச்சினால் உள்வாங்கப்படும் எனும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. எனினும், வைத்திய உபகரணங்கள், அம்பியுலன்ஸ், உரங்கள் மற்றும் அதி உயர் புரத விவசாய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தானியங்களினால் பெற்றுக்கொள்ளும் உணவுகளுக்கு VAT விலக்களிப்பு செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டது.
VAT விலக்களிப்பை நீக்குவது UBER மற்றும் PickME கட்டணங்களில் தாக்கம் செலுத்துவதில்லை என குழு வலியுறுத்தியது. UBER மற்றும் PickME என்பவற்றுக்கு ஆரம்பத்திலிருந்தே VAT உள்வாங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இறக்குமதிக் கட்டுப்பாடு அல்லது வரி செலுத்தாமை காரணமாக சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதி சட்டம் மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதி சட்டம் என்பவற்றை திருத்துவதற்கான நிதி சட்டமூலம் தொடர்பிலும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
எனினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 22 ஆம் திகதியிலான 2176/19 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வாகன இறக்குமதியைக் இடைநிறுத்தியதன் பின்னர் LCs திறப்பது தொடர்பில் ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட 119 வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்வது தொடர்பான ஏற்பாடுகள் பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், 2353/16 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி பரிசீலிக்கப்பட்டு குழுவினால் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஷெஹான் சேமசிங்க, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ நிமல் லன்சா, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ மதுர விதானகே, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ ஹர்ஷண ராஜகருணா ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








