தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டங்களைத் திருத்துவது தொடர்பில் குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் தினேஷ் குணவர்தன |
திகதி : | 2023-11-29 |
சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக அமுலில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த சட்டத்தை தற்போதைய சமூக நிலைமைக்கு ஏற்றவாறு திருத்துவதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உப குழுவொன்று அமைக்கப்படவிருப்பதாக பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற (நவ. 27) பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நிறுவனங்களில் பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் சிறந்த திறனைக் கொண்ட அதிகாரி ஒருவரை செயலாளர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களில் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிதி ஒதுக்கீடு செய்து பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்ற அதிகாரிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குள் மாத்திரம் இடம்மாற்றம் செய்வதற்குக் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுதத் மஞ்சுள முன்வைத்த முன்மொழிவு மற்றும் தற்பொழுது இடம்பெற்றுவரும் வேகமான நகரமயமாக்கலின் மத்தியில் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெவ்வேறு மாற்றங்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இந்த உபகுழு அமைக்கப்படவுள்ளது.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட செயற்பாடுகளை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் டெங்கு போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் சில உள்ளுராட்சி மன்றங்கள் மெத்தனப் போக்குடன் செயற்படுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை குறைப்பதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தின் போது, பிரதேசங்களில் அதிகபட்ச சேவைக் காலத்தை 6 வருடங்களாகவும், மாவட்டத்தில் அதிகபட்ச சேவைக் காலத்தை 10 வருடங்களாகவும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக ஒரே இடத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களை இனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்வைத்த யோசனையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் பிரதமர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மாகாண சபைகளில் நீண்டகாலமாக கடமையாற்றும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படாமல் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இணையாக இடமாற்ற நடவடிக்கையில் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
2024ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் அங்கீகாரத்துடன் செலவிடப்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் வவுனியா விஜயத்தின் பலனாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமருக்கு விசேட நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்தார்.
பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









