அரசாங்க நிறுவனங்களில் சேவையைப் பெற்றுக்கொள்ள வருகைதரும் பொதுமக்களை சமமாக நடத்தவும் - வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பணிப்புரை |
திகதி : | 2023-11-27 |
- அரசாங்க நிறுவனங்களில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் ஒரு தகவல் தொழல்நுட்ப அதிகாரியை (IT Officer) நியமிக்கவும் – உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் குழுவில் கோரிக்கை
அரசாங்க நிறுவனங்களில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும் பொதுமக்களை சமமான முறையில் நடத்துமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்திராரச்சி தலைமையில் அண்மையில் (நவ. 17) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதில் மேல்மாகாணத்தின் நகர சபைகள், மாநகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பிரதானிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் எவருக்கும் அசௌகரியம் ஏற்படாது என குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு அரசாங்க நிறுவனங்களுக்குப் பொதுமக்களால் அனுப்பிவைக்கப்படும் கடிதங்களுக்குப் பதில் கடிதங்களை விரைவில் அனுப்பிவைக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க நிறுவனங்களில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (IT Officer) நியமிக்க வேண்டும் என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் குழுவிடம் கோரிக்கைவிடுத்தனர்.
சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு வெவ்வேறு திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வரும் நபர்களுக்கு அவற்றை பரிசீலித்து அனுமதியை வழங்குவதற்கு வினைத்திறன் மிக்க திட்டமொன்றை தயாரிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், பொது மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கையளிக்கும் பூர்த்தி செய்யப்படாத ஆவணங்களைப் பொறுப்பேற்காது முழுமையாகப் பூர்த்தி செய்த ஆவணங்களைப் பொறுப்பேற்பதன் மூலம், ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
இந்தக் குழுக் கூடு்டத்தில் குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ ஜே. சி. அலவத்துவல, கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ ஜயந்த வீரசிங்க ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ இசுரு தொடங்கொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








