தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டக வரைபு தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு |
திகதி : | 2023-11-25 |
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகம் (National Education Policy Framework) தொடர்பான அறிக்கை தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில், பிரதமரின் செயலாளரும் தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான அனுர திசாநாயக்க இதுபற்றிய விளக்கத்தைக் குழுவுக்கு வழங்கினார்.
அதற்கமைய, தேசியக் கல்வியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள எதிர்பார்க்கும் பிரதான மாற்றங்களின் சாராம்சம் தொடர்பில் பல்வேறு துறைகளில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ விமலவீர திசாநாயக்க, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் இந்த உருவரைச்சட்டகத்தை தயாரிப்பதில் தொடர்புபட்ட பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். மேலும், குழுவின் இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய அவர்களின் கருத்துக்களும் குழுவில் முன்வைக்கப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









