சபைக் குழுவுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் |
திகதி : | 2022-08-29 |
பாராளுமன்றத்தின் 117 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சபைக் குழுவில் பணியாற்றுவதற்காக சபாநாயகரை தவிசாளராகவும், பின்வரும் உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, கௌரவ ஏ. எல். எம். அதாஉல்லா,கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன், கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ நிமல் லான்சா, கௌரவ பியல் நிசாந்த த சில்வா, கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி, கௌரவ மர்ஜான் பளீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






