இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

திகதி : 2022-08-29

பாராளுமன்றத்தின் 116 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக  தவிசாளராகச் சபாநாயகரையும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, கௌரவ சாகர காரியவசம், கௌரவ யதாமிணீ குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom